பிரதான செய்திகள்

முறைப்பாடு வழங்கிய சாந்தசோலை! மக்களை சந்தித்த வவுனியா அரசாங்க அதிபர்

வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சென்ற குழு சாந்தசோலைப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

குறித்த சந்திப்பு இன்று சாந்தசோலை பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி சாந்தசோலைப்பகுதி மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று தமது கிராமத்திலுள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தருமாறு கோரியிருந்தனர்.

இதையடுத்து சாந்தசோலை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேவைகளை பார்வையிடுவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையிலேயே வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, நொச்சிமோட்டை கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர் ஆகியோர் இன்று அங்கு சென்றிருந்தனர்.

 

இதன்போது, அப்பகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், சாந்தசோலையில் 40 குடும்பங்களுக்கு வீடு பெற்றுத்தருமாறு பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.

மேலும், சில விபரங்களை கேட்டறிந்த அரசாங்க அதிபர் தேவையான உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்று தருவதாகவும் அதை கட்டம் கட்டமாகவே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபைகளைப் புறக்கணித்து தீர்மானமெடுப்பதை கண்டிக்கின்றோம் : வடக்கு முதலமைச்சர்

wpengine

இஸ்லாமிய பி.பி.சி. செய்தியாளர் நீக்கம்! காரணம் என்ன

wpengine

ரணிலுக்கு எதிராக மஹிந்தவின் புதிய கூட்டணி

wpengine