பிரதான செய்திகள்

சமுர்த்தி புதிய தெரிவில் 519 பேர் நீக்கம்! நுவரெலியா பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி உதவித்தொகை அட்டை கிடைக்கபெறாத பயனாளிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தலவாக்கலை சமுர்த்தி காரியாலயத்திற்கு அருகில் இன்று காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமுர்த்தி உதவித்தொகை பெருவோர் தெரிவில் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 519 பேர் நீக்கப்படுள்ளதாகவும், இவர்களுக்கு பதிலாக வேறு பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புதிய கணிப்பீட்டின் படி இதுவரை காலமும் சமுர்த்தி உதவித்தொகை பெற்று வந்த தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியினர் எவரும் அரசாங்கத்துடன் இணைய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!-ரஞ்சித் மத்தும பண்டார-

Editor

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு : தொலைக்காட்சிக்கு ஆபத்து?

wpengine

அமைச்சுப் பதவிகளை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை

wpengine