Breaking
Tue. Nov 26th, 2024
2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் கணக்கெடுப்பின் ஆரம்ப படிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதற்கான ஆவணங்கள் இன்று(10) தொடக்கம் செப்டெம்பர் ஆறாம் திகதிவரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அதில் பரிசீலிக்கலாம். பதிவு செய்யப்படவில்லையாயின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் வழங்கியுள்ளது.

ஒருவர் தனது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றம் மற்றும் கிராம அலுவலர் பணிமனைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் தேருநர் இடாப்பிலிருந்து பார்த்து பரீசீலிக்கமுடியும் என தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பெயர் இல்லாவிடின் தனது கோரிக்கை படிவத்தை மேற்குறிப்பிட்ட இடங்களில் பெற்று எதிர்வரும் செப்டெம்பர் ஆறாம் திகதிக்கு முன் உரிய மாவட்ட செயலகத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு www.elections.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு பரீசீலித்துப்பார்க்கலாம் அதற்கு தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் மாவட்டத்தையும் உள்ளிட்டு பரீசீலிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *