Breaking
Tue. Nov 26th, 2024

(ஏ.எச்.எம். பூமுதீன்)

துபாய், பஹ்ரைன் என்று அம்பாறை மாவட்ட மக்களை கொச்சைப்படுத்திய முகா தலைவர் ஹக்கீம், இப்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உளறி வருவதை அவதானிக்க முடிகின்றது.

“தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அம்பாறை பிராந்தியத்தில் உருவாக்குவதே அடுத்த இலக்கு ” என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளருமான ஜெமீல் நிகழ்வொன்றின் போது கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கத்தில் மர்ஹூம் அஷ்ரபுக்கு அடுத்து அதிக பங்களிப்பு செய்தவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதனால், இப்பிராந்தியத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் அவரது அடுத்த இலக்கு நியாயமானது. மட்டுமன்றி, அவரது சொல்லை நம்பவும் முடியும். காரணம் செய்து காட்டியவர்.

அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தியையும் செய்திராத அல்லது செய்யவிடாத ஹக்கீம் , இப்போது ஜெர்மன் டெக் நிறுவனத்தை கிழக்குக்கு கொண்டுவந்து தொழில் கல்வி போதித்து கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தனியார் பல்கலைக்கழகம் என்றதும் அவருக்கு போட்டியாக ஹக்கீம் குதித்துள்ளார்.

துபாய், பஹ்ரைன் என்று அம்பாறை முஸ்லிம்களை கொச்சைப்படுத்தியது போதாதென்று புதிதாக இப்போது ஜெர்மன் கதையளக்குறார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்பது இப்பிராந்தியத்துக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அதனால் நன்மை அடய்ந்த குடும்பங்கள் பல ஆயிரம் இதுவரை. அந்த குடும்பங்களின் உள்ளங்களில் மர்ஹூம் அஷ்ரபும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலும் குடி கொண்டுள்ளனர். அந்த குடும்பங்கள் என்றும் இவர்கள் இருவருக்கும் நன்றிக் கடன் பட்டவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், ஜெமீல்- தனியார் பல்கலைக்கழகத்தையும் அமைத்தால் முழு மாணவ மட்டும் இளைஞ்சர் சமூகமும் அவர் பக்கம் சென்றுவிடும் என்ற அச்ச உணர்வே ஜெர்மன் டெக் என்ற ஹக்கீமின் உளறலாகும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத்தின் வழிகாட்டலில் சகோதரர் ஜெமீல் தனது கல்வித் துறைக்கான அடுத்த இலக்கண தனியார் பல்கலைக்கழகம் நிறுவ பிரார்த்திப்போம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *