Breaking
Tue. Nov 26th, 2024

பேஸ்புக் உள்­ளிட்ட சமூக வலைத் தளங்­களைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வா­திகள் மிக இல­கு­வாக ஒன்­றி­ணைந்து தமது நோக்­கங்­களை நிறை­வேற்றி வரு­கின்­றனர்.  இது இலங்­கைக்கு மட்­டு­மன்றி அனைத்து நாடு­க­ளுக்கும் பாரிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என்று   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

 

இதனை முறி­ய­டிக்க உறு­தி­யான விசா­ரணைக் கட்­ட­மைப்பும், விரி­வான தகவல் பரிமாற்ற கட்­ட­மைப்பும் அவ­சியம்.   அதற்கு இன்­டர்போல் எனும் சர்­வ­தேச பொலிஸார் இலங்­கை­யுடன் கைகோர்த்து உதவுவர் என நம்­பு­கின்றேன் என்றும் அவர் மேலும்  குறிப்­பிட்டார்.

சர்­வ­தேச பொலி­ஸாரும் இலங்கை பொலி­ஸாரும் இணைந்து ஏற்­பாடு செய்த தென் மற்றும் தென்­கி­ழக்­கா­சிய வல­யத்தின் பயங்­க­ர­வாதம் மற்றும்  சர்­வ­தேச குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லான சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­களின் ஒன்­று­கூடல் நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அந்த நிகழ்வை  ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே பிர­தமர்  இதனைத் தெரி­வித்தார்.

இரு நாட்­க­ளுக்கு இடம்­பெறும் இந்த ஒன்­று­கூடல் பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை பெற்று வரு­கின்­றது. கனடா அர­சாங்­கத்தின் நிதிப் பங்­க­ளிப்­புடன் நடைபெறும் இந்த ஒன்­று­கூ­டலில் இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு­களைச் சேர்ந்த  குற்ற விசா­ரணை, பயங்­க­ர­வாத புல­னாய்வு, சர்வ­தேச குற்­றங்கள், உளவுத் தக­வல்கள், சட்­டத்தை அமுல் செய்தல் மற்றும் பொலிஸ் பயிற்சி ஆகி­ய­வற்றில் தேர்ச்சி மிக்க சுமார் 45 சிறப்பு அதி­கா­ரிகள் பங்­கேற்­றுள்­ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய, கனடா உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் உயர் அதி­காரி  ஜெனிபர் ஹார்ட், சர்­வ­தேச பொலி­ஸாரின் பயிற்சி மற்றும் திறன் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான பணிப்­பாளர் ஹரீன் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்­த­தா­வது,

சர்­வ­தேச பொலிஸார் இத்­த­கைய பிராந்­திய வேலைத் திட்டம் ஒன்­றினை இங்கு நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தமை தொடர்பில் நான் முதலில் நன்றி கூறு­கின்றேன்.

இன்று இலங்கை மட்­டு­மல்ல, முழு உலகும் எதிர்­கொள்ளும் மிகப் பிர­தான சவாலும் பிரச்­சி­னையும் தான் இந்த பயங்­க­ர­வாதம் மற்றும் சர்­வ­தேச குற்­றங்கள் தொடர்­பி­லான விட­யங்­க­ளாகும்.

உலக மய­மாக்­கலின் பின்னர் சட்டம் ஒழுங்கை அமுல் செய்­வதில் பாரிய சவால்கள் ஏற்­பட்­டதன் விளைவே இது­வாகும்.

எனவே, சட்டம் ஒழுங்கை அமுல் செய்யும் பொலிஸார் உள்­ளிட்­டோரின் திறன் அபி­வி­ருத்தி மற்றும் பயிற்­சியை காலத்­துக்கு ஏற்­றாற்போல் மாற்றி அமைக்க வேண்டும்.

தொழில் நுட்­பமும் தொடர்­பா­டலும் மிக வேக­மாக அபி­வி­ருத்தி அடைந்­துள்ள இக்­கால கட்­டத்தில் பாரிய குற்­றங்கள் அவற்றின் ஊடாக மிக சுல­ப­மாக இடம்­பெ­று­கின்­றன. முக்­கி­ய­மாக போதைப் பொருள் கடத்தல் குற்­றங்கள் மிகப் பெரிய சவா­லாக உள்­ளன.

அதே­போன்று பயங்­க­ர­வாத பிரச்­சி­னையும் உள்­ளது.   இலங்­கையில்  தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் பிரச்­சினை இருந்­தது. 30 வரு­டங்­க­ளாக தனி­யான நாட்டைக் கோரி அவர்கள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். எனினும் இன்­றைய   நிலைமை அவர்கள் போரா­டி­யது போன்று வெளிப்­ப­டை­யா­ன­தல்ல. மாற்­ற­மாக இன்று சில பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் தாம் ஒரு குழு­வினர் இருக்­கின்றோம் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக மட்­டுமே அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றன. இது ஒரு மிகப் பெரும் பிரச்­சினை. அவர்­க­ளுக்கு நோக்கம் கிடை­யாது. தம்மை வெளிக்­கா­ட்டிக் கொள்ள அவர்கள் இத்­த­கைய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

பேஸ் புக் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்கள் மிகப் பெரிய பிரச்­சி­னை­யா­க­வுள்­ளன. அத­னூ­டாக பயங்­க­ர­வா­திகள் மிக சுல­ப­மாக ஒன்­றி­ணை­கின்­றார்கள். எனவே பொலிஸ் என்­பது தேசிய ரீதியில் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் அவர்­க­ளது பணி  உல­க­ம­ய­மாக்­கப்­படல் வேண்டும்.

குறிப்­பாக போதைப் பொருள் கடத்தல், சர்­வ­தேச குற்­றங்கள், பயங்­க­ர­வாதம் தொடர்பில் உறு­தி­யான விசா­ரணைக் கட்­ட­மைப்பு ஒன்று அவ­சி­ய­மாகும். அதற்­காக கடந்த  தகவல் பரி­மாற்ற முறை­மையும் வேண்டும்.

எனவே தான் சர்­வ­தேச பொலிஸார் இது தொடர்பில் தலை­யீடு செய்து இலங்கை போன்ற நாடுகளுக்கு  அது தொடர்பில் பயிற்சியளிக்க வேண்டும். தெற்கு தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றின் பிரச்சினை சட்டத்தை அமுல் செய்யும் பொலிஸாருக்கு உள்ள திறன் அபிவிருத்தி தொடர்பிலான வளப் பற்றாக்குறையேயாகும்.  எனவே இலங்கைக்கு  மிக விரைவில் பொலிஸ் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சர்வதேச பொலிஸார் உதவி செய்வர் என் நம்புகின்றேன் என்றார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *