Breaking
Tue. Nov 26th, 2024

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெளிமாவட்ட வியாபாரிகள் மணல் அகழ்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மணல் ஏற்றுவதற்கு வருகைதந்த வாகனங்களை மறித்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவடையும் வரை வாகனங்களைச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை ஆற்றுப் பகுதிகளில் மணல் அகழ்வதைக் கண்டித்தும் புலுட்டுமானோடை, வெரச்சியாறு, உடும்புக்கல் ஆறு, மற்றும் கார் மலை போன்ற அரச வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும்   இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதிகளை அண்டியுள்ள பகுதிகளில் ஆற்றில் அகழப்படும் மண்ணின் அளவிற்கு அதிகமாக சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாகவும், இதனால் ஆறு பெரிதாகிக் ஆழம் அதிகரித்து நிலம் மற்றும் குடியிருப்புகள் அழிவடைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அகழப்படும் மண் கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுவதனால் வீதிகள் சேதமடைவதுடன் வீதியில் செல்லும் கால்நடைகளும் விபத்துக்குள்ளாவதாக குற்றம் சுமத்தும் பிரதேச மக்கள், பெண்கள் குழந்தைகள் வீதியில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரதேச மக்கள் வறுமையில் வாடும் போது வெளி இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு மண் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலசேனை கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *