தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவும், ஈ.பி.ஆர்.எல். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையேயான சந்திப்பு முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது, ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, “நானும் கதைக்க வெளிக்கிட்டால் உதைவிடக் கூடக் கதைப்பேன். அதற்கான இடமும் இதில்லை.
நீங்கள் (சுரேஸ்) வருவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டேன் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.