பிரதான செய்திகள்

வவுனியா,பட்டாணிச்சூர் பகுதியில் வாகன விபத்து! மூவர் வைத்தியசாலை

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது

வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கைக்கு அருகே எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

 

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.​

Related posts

அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசிகளை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine

பதவியை இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர்

wpengine

எழுத்து ஓடக்ளேயே வாள்ப்பைற்!

wpengine