பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் அனுபவிக்கின்றார்! ஆசாத் சாலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கென அதன் மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஒதுக்கப்பட்ட கொழும்பு 02, வொக்ஷோல் வீதி, இல.53 இல் அமைந்துள்ள 08 மாடிக்கட்டம் தனியொருவரின் சொத்தாக மாறியிருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சராக உள்ள ஹாபிஸ் நஸீர் அஹமத் இந்தச் சொத்துக்களை அனுபவித்து வருவதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் பல இடங்களில் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் அலங்கோலமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கென உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடைய நீண்ட கால இருப்பைக் கருத்திற்கொண்டு தலைவர் அஷ்ரப் லோட்டஸ்  நம்பிக்கை நிதியத்தையும் யுனிட்டி பில்டர்ஸ் (தனியாள்) நிறுவனத்தையும் உருவாக்கிவிட்டுச் சென்றார். இந்த நம்பிக்கை நிதியமே தாருஸ்ஸலாம் உட்பட பல சொத்துக்களின் உரித்தைக் கொண்டிருக்கும் உறுதியாகக் காணப்படுகிறது.

முஸ்லிம்களின் சொத்தான இந்த தாருஸ்ஸலாமிலிருந்து எந்த வருமானமும் இதுவரை சமூகத்துக்காப் பெறப்படவில்லை என்றும் அசாத் சாலி சுட்டிக் காட்டினார்.

Related posts

வெள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்து உடனுக்குடன் உதவினார் அமைச்சர் றிசாத்!

wpengine

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் ரிஷாட் எம்.பி.

Maash

முசலி கோட்டப் பாடசாலை ஆசிரியர்கள்! பாட நேரத்தில் விடுதியில் தூக்கம்

wpengine