குகுள் நிறுவனம் 2016-ம் ஆண்டில் ஸ்நாப்சாட் நிறுவனத்தை 3000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்கிறது. எனினும் ஸ்நாப்சாட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை.
ஸ்நாப்சாட் நிறுவனத்தை 3000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றுவது தொடர்பாக கூகுள் மற்றும் ஸ்நாப்சாட் நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஸ்நாப்சாட் நிறுவனத்தின் இறுதி நிதிநிலை பேச்சுவார்த்தைகளின் போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நிறுவனத்தை கைப்பற்றும் போது எவான் ஸ்பெய்கெலிற்கும் அதிகப்படியான சலுகைகளை வழங்குவதாக கூகுள் தெரிவித்திருந்தது. எனினும் இவை அனைத்தையும் எவான் மறுத்துள்ளார். பேஸ்புக் நிறுவனமும் ஸ்நாப்சாட்டை கைப்பற்ற நினைத்து, அந்நிறுவனத்திற்கு 300 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக தெரிவித்தது.
மூன்று ஆண்டுகளில் ஸ்நாப்சாட் மதிப்பு அதிகரித்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில் ஸ்நாப்சாட் பங்குகள் 2.3 சதவிகிதம் அதிகரித்தது. எனினும் தற்சமயம் ஸ்நாப்சாட் வளர்ச்சியில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவை இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஸ்நாப்சாட் வியாபாரத்தில் இன்ஸ்டாகிராம் முன்னிலை வகிக்கிறது. ஸ்நாப்சாட்டை விட தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுகுறித்து கூகுளிடம் தகவல் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளது. எனினும் ஸ்நாப்சாட் மற்றும் கூகுள் நிறுவனங்களிடையே நல்லுரவு ஏற்பட்டுள்ளது. கூகுள் தலைவர் எரிக் ஸ்கிம்ட் ஸ்பெய்கெலிற்கு ஆலோசனை வழங்கி வந்தார். ஸ்நாப்சாட் கூகுளின் ஆஃபீஸ் மென்பொருள் சூட் இயக்கி வருகிறது.
கூகுளின் கிளவுட் ஹோஸ்டிங்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 200 கோடி டாலர்களை செலவிட ஸ்நாப்சாட் முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் ஸ்நாப்சாட் நிறுவனத்தின் மீது கூகுளின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.