பிரதான செய்திகள்

திருகோணமலை விளையாட்டு மைதானத்தை வழங்க கோரி வீரர்கள் வீதி போராட்டம்

திருகோணமலை – மெக்கெய்சர் மைதானத்தை விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை, பொது மக்களது பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த விளையாட்டு மைதானத்தை அரசு புனரமைக்கவென ஆரம்பித்து பல ஆண்டுகள் சென்றுள்ளது. இருப்பினும் மைதானம் இது வரையிலும் கழகங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை.

 

இதனால் இளைஞர் – யுவதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மைதானமானது விளையாட்டுப் போட்டிகள் தவிர்ந்த வியாபார நடவடிக்கைகளுக்கும், களியாட்ட நிகழ்வுகளுக்கும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பல்வேறு விளையாட்டுக் கழகங்களின் இளைஞர் – யுவதிகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

5ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது “மிகவும் கடினம்” என்று தேர்தல் ஆணைக்குழு

wpengine

கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு..!

Maash

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்

wpengine