Breaking
Mon. Nov 25th, 2024
நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள், தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர். அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன், இரண்டாம் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 02 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் கடந்த வாரம் 27.07.2017ல் வழங்கப்பட்டிருந்தன. மேலும், மூன்றாவதும் இறுதியுமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 02 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் கடந்த 01.08.2017ல் வழங்கப்பட்டிருந்தன.

இதன்படி,

1. 15.06.1989ல் முள்ளிக்குளம் தாக்குதலில் கொல்லப்பட்ட புளொட் உறுப்பினரின் தாயாரான, கிரான்குளத்தில் வதியும் மயில்வாகனம் மனோன்மணி என்பவருக்கு, அரிசி வியாபாரம் செய்வதற்காக ரூ 35000/-ம்
2. 09.01.1990ல் சுட்டுக் கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர் கணேசலிங்கத்தின் மனைவியான, கொக்கட்டிச்சோலை கடுக்காமுனையில் வதியும் சயமலர் அவர்களுக்கு நெல் குற்றி அரிசி வியாபாரம் செய்வதற்காக ரூ 35000/-ம் வழங்கப்பட்டுள்ளது

முதலிரு கட்ட உதவிகளுக்கான நிதியினை புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையும் மூன்றாம் கட்ட உதவிக்கான நிதியினை இலண்டனில் வதியும் த.சிவபாலனும் வழங்கியிருந்தனர்.
மூன்றாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் உபதலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச. வியாளேந்திரன், செயற்குழு உறுப்பினர் ந. இராகவன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *