முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, ஹங்குரகெத்த விஷ்ணு கோவிலுக்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்கவுக்கு கலந்து கொண்டுள்ளார்.
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு அவசியமாக உள்ள ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகனான யோஷித ராஜபக்ச இந்த நாட்களில் விசாரணை பிரிவுகளை புறக்கணித்து வருகின்றனர்.
கடந்த 27 மற்றும் 28ஆம் திகதி குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து குற்ற விசாரணை பிரிவை புறக்கணித்தனர்.
தாஜுடீன் கொலை இடம்பெற்ற தினத்தன்று அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனம் ஷிரந்தி ராஜபக்சவுக்கு செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனம் என்வும் இது தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.