பிரதான செய்திகள்

முசலி ஒருங்கிணைப்பு கூட்டம்! காணி,வனபரிபாலன அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை! நாளை கூட்டம்

(ஊடகப்பிரிவு)
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடந்த 29.07.2017 அன்று முறையே காலை 9.30 மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேச செயலக மண்டபங்களில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடல்களுக்கு இணைத் தலைவர்களான வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் மற்றும் முதலமைச்சரின் பிரதிநிதியாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு கூட்டத்தை நடாத்தினர்.

மேற்படி கூட்டங்களில் காணி மற்றும் வன பரிபாலனம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன். வன பரிபாலன அதிகாரி கூட்டத்திற்கு சமூகமளிக்காதமையினால் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் 03.08.2017 அன்று நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

Related posts

புத்தாண்டில் மரக்கன்று நடுமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை!

Editor

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

wpengine

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

wpengine