பிரதான செய்திகள்

மின் பாவனையாளருக்கு சந்தோஷமான செய்தி

மின்சாரத் தடையோ அல்லது கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக மின் கட்டண அதிகரிப்போ அல்லது மின் துண்டிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்…

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் நாளாந்த மின் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை உயர்வடைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நீர்நிலைகளின் நீர் மட்டம் 36 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

சில நீர்நிலைகளின் நீர் மட்டம் 20 வீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

பிரதான மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரம் பழுதடைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் மின்சாரத் துண்டிப்போ, கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

சமல் ராஜபஷ்ச தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

wpengine

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

wpengine