பிரதான செய்திகள்

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

மன்னார் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (31) காலை முதல் 9 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரையான காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக குறித்த நீர் வினியோக தடை ஏற்படுவதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

தனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு

wpengine

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

wpengine