பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார், முசலி பிரதேசத்தில் தொடர் மாட்டு களவு! மாட்டிக்கொண்ட கள்வர்கள்

கடந்த பல மாதகாலமாக மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் தொடராக மாடுகள் களவு போவதாக பிரதேச மாட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக எமது வன்னி நியூஸ் செய்தி பிரிவு சிலாவத்துறை பொலிஸ் பிரிவை தொடர்பு கொண்டு வினவிய

போது கடந்த திங்கள் (24) கிழமை அரிப்பு,வெள்ளிமலை மற்றும் கொண்டச்சி கிராமங்களை சேர்ந்தவர்களை பிடித்து பிடித்துள்ளோம், எனவும் தற்போது இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் இருப்பதாகவும் சிலாவத்துறை பொலிஸ் நிலைய தகவல் தெரிவிக்கின்றன.

இவர்களை விசாரணைக்காக நேற்று மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய வேலை நீதவான் விசாரணை எதையும் மேற்கொள்ளாமல் மீண்டும் ஒருவாரத்திற்கு தவனை போட்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

முசலி பிரதேச மாட்டு களவுடன்
தொடர்டைய பலர் இருக்கின்றார்கள் என்றும் இவர்களை கைது செய்ய விஷேட குழுவினர் இரவு நேரத்தில் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாளை வவுனியாவில் ரணில்,மைத்திரி! விஷேட ஏற்பாடுகள்

wpengine

நல்லாட்சியில் ஒரு முஸ்லிம் ஆளுநர் இல்லை ஆனால் மஹிந்த கௌரவித்தார் முஸ்லிம்களை

wpengine

தாக்குதல் பேஸ்புக்கில் பார்த்தே அறிந்துக்கொண்டேன் ஜனாதிபதி

wpengine