பொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்தித்தை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்பட்டுள்ள நிலையில், கடமைக்கு திரும்பாத பெற்றோலியத்துறை ஊழியர்கள் கடமையில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.