(அ.அஹமட்)
குருநாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா உறுப்பினர்கள் வழக்கில் இருந்து முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் குருநாகலை பிரதேசத்தில் அவரை சுற்றி வளைத்தமையின் வெளிப்பாடாக குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டது. அதன் பின்னணியில் கைதுசெய்யப்பட்ட பொது பல சேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்கள் அந்த குற்றத்தை புரிந்தார்கள என்பதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லை என பொலிஸார்நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் எவரையும் கைது செய்யவேண்டாம் என நீதிபதி பொலிஸாருக்கு கடும் தொனியில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பலசேனா உறுப்பினர்கள் சீ சீ டீ வி ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக முன்னாத தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது தகுந்த ஆதாரம் இல்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
சீ சீ டிவி ஆதார அடிப்படையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த போதிலும் கைது செய்ய போதுமான ஆதாரம் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க தகுந்த ஆதாரமில்லாமல் போனது எவ்வாறு என்பதற்கு நல்லாட்சியில் எமது முஸ்லிம்களுக்கு பதில் கிடைப்பதுசந்தேகமே.