2018ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஆங்கில திறனை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பணியாளர்களின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய, தகுதி நிலையை மீறி பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதற்கு சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதிநிதி நிறுவனங்கள் உதவி செய்வதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 40 நாட்கள் பயிற்சி வழங்குவதனையும் கட்டாயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.