பிரதான செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடம்

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் நிலவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 29ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய விண்ணபித்த விண்ணப்பதாரிகளுக்கு கடந்த 2016 ஓகஸ்ட் 18ம் திகதி மற்றும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கே இந்நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது.

பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் முதலாம் மாடியில் அமைந்துள்ள சமுர்த்தி திணைக்களத்தில் நடைபெறவுள்ள இந்நேர்முகத்தேர்வுக்கு வருவோர் பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள், கிராம சேவையாளர் சான்றிதழ், நற்சான்றுபத்திரங்கள், தொழிற்தகமை உள்ளடக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களுடன் வருகை தருமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

வடக்கு வைத்தியசாலைகளில் தொடர் மரணங்கள் தொடர்பில் இதுவரையும் நடவடிக்கை இல்லை .

Maash

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தில் இணைந்த சேகு,ஹசன்

wpengine

மொட்டுக்கட்சி 134 ஆசனங்களை பெறும்! வாக்களிக்கவில்லை என்றால் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்

wpengine