பிரதான செய்திகள்

முஸ்லிம்களை வெளியேற்றியது தவறு ஏற்றுக்கொண்ட பிரபாகரன்! ஏன் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகள் மறுக்கின்றார்கள்.

வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2002 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.

அதன் பின்னால் உள்ள உள் நோக்கம்தான் என்ன,

யுத்த காலத்திலே இலங்கை அரசாங்கமும்,உதவி செய்வதாக கூறிக்கொண்டு வந்த நாடுகளும்,அந்நிய அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் முஸ்லிம் நல்லுறவில் திட்டமிட்டு ஏற்படுத்திய ஆறாத வழுக்கள் யாவரும் அறிந்த உண்மையாகும்.

தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கும், யார் முதலில் தாக்குதல் செய்தார் என்ற விசாரனைகளும் இன்று தேவையற்றதாகும்,சகல கசப்பான அனுபவங்களும் மன்னிக்கப்பட்டு,நல்லுறவிற்கான புதிய அத்தியாயங்கள் இந்த இரு சமூகங்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும்.

தாயக மண்ணின் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நிலையில் கடந்த இருபத்தாறு வருடங்களாக வடபுல முஸ்லிம் சமூகம் பல சொல்லொனா துயரங்களோடும்,அன்று அகதி என்றும் இன்று வந்தான் வரத்தான் என்றும் வடபுல மண்ணிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அன்று விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சகல வடபுல முஸ்லிம் மக்களும்,அவர்தம் சந்ததியினரும் வடபுலத்திற்கே உரித்தானவர்கள்,வடபுல மண்ணில் எந்த நிபந்தனைகளும் அற்ற முறையில் மீள்குடியேற முழு உரிமையும் உடையவர்கள். இது எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

1990 அன்று வெளியேற்றப்பட்ட‌போது ஆயிரம் குடும்பமாக இருந்தவர்கள் இன்று மூவாயிரம் குடும்பங்களாக அதிகரித்திருப்பார்கள்.
வடபுல முஸ்லிம்கள் அன்று வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சாதாரண இயற்கை சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு நிலப்பகிர்வு கிடை த்திருக்கும், எனவே இந்த உண்மை நிலை உணரப்பட்டு, மீள்குடியேற வருகின்ற முஸ்லிகள் வடபுல மண்ணில் வாழ வழி கொடுக்கப்பட வேண்டும்.

வடபுல மண்ணிற்கே உரித்தான மக்கள் மீள்குடியேற வரும்போது நில ஆக்கிரமிப்பு என்றும்,அந்நியர் என்றும் எதிர்ப்பதும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் சிறப்பான செயற்பாடுகள் அல்ல என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கு முஸ்லிகளை தமது கட்டுப்பாட்டு க்குள் வைத்துக் கொள்ள தமிழ் தரப்பினர் எதிர்பார்ப்பதானது தொடர்ந்தும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கவும்,சமஸ்டி கோரிக்கை,காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் என்பவற்றிற்கு எதிராக செயற்படவுமே இட்டுச் செல்லும்.
எனவே தமிழ் சமூகத்தினது டயஸ்போராக்களோடும்,இலங்கையில் இருக்கும் உரிய தமிழ் தரப்பினரோடும் நாம் விரிவான,மனம் திறந்த கலந்துரையாடல்களை தொடர தயாராக உள்ளோம்.

இரு சமூகத்தினதும் சிவில் சமூகப்பிரதிநிதி களோடு அரசியல் பிரதிநிதிகளும்,அதிகாரிகளும் மேற்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளே வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடைமுறை சாத்தியமுடைய திட்டங்களை உருவாக்கவும்,தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் களைக்கப்படவும்,வடகிழக்கு‌ மண்ணுக்கும்,மக்களுக்கும் தேவையான உண்மையான் அதிகார பாகிர்வை பெற்றுக் கொள்ள அதற்காக இரு இனமும் ஒன்றாக குரல் கொடுக்க வழி வகுக்கும்.
இந்த நிலைப்பாட்டிலே நின்று நாம் சகல தமிழ் தரப்பினரையும் நம்பிக்கையுடன் கூடிய,மனம் திறந்த பேச்சு வார்த்தைக்கு நேசக்கரம் நீட்டுகின்றோம்.

Related posts

மஹிந்தையின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது .

Maash

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்!

wpengine

20க்கு அதாவுல்லா,அமைச்சர் டக்களஸ் கட்சிகள் ஆதரவு

wpengine