வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரன்டினா தொழில்வள நிலையத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
க.பொ.த. உயர்தரத்தில் கணித,விஞ்ஞானத்துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரத்து 500 ரூபாவும், கலை வணிக பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபாவும் இந்த நிறுவனதினால் அவர்களது வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்யப்பட உள்ளது.
மாணவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை இம்மாதம் 26 ஆம் திகதிக்கு முன் பெரன்டினா, இல.119 ,புகையிரத நிலைய வீதி, வைரவப் புளியங்குளம், வவுனியா எனும் முகவரிக்கோ அல்லது பெரன்டினா, செல்வ புரம் வீதி, முல்லைத்தீவு எனும் முகவரிக்கோ அல்லது பெரன்டினா,இல.88 நீதிமன்றம் அருகாமை கிளிநகர் கிளிநொச்சி எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்கப்படல் வேண்டும். மேலதிக தகவல்களை 021 493 0130 , 021 492 7500, 021 492 7574 எனும் தொலைபேசி இலக்ககங்களினூடக பெற்றுக்கொள்ள முடியும்.