(அட்டாளைச்சேனை கலீல்)
வடக்கில் முடங்கி கிடந்த மயில் கட்சியை மட்டக்களப்பில் சிறந்த திட்டமிடல் மூலம் விஸ்தரித்த பெருமைக்கு சொந்தக்காரராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் அக்கட்சியின் தவிசாளராக இருக்கின்ற அமீரலி அவர்களையும் குறிப்பிடலாம்.
முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறையில் கால்பதிக்க சிறு தயக்கத்துடன் இருந்த மயிலை அம்பாறைக்கு கொண்டுசென்று மக்களின் அபிமானம் பெற்ற கட்சியாக மாற்றியமைத்ததில் அக்கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண அமைப்பாளராகவும் இருந்த அன்வர் எம் முஸ்தபாவின் பங்கு அளப்பெரியது எனலாம்.
அக்கட்சியை அம்பாறைக்கு கொண்டுவந்து பலரின் ஏளனத்துக்கும் மத்தியில் விஸ்தரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு அம்பாறையின் சகல பாகங்களிலும் கட்சியை கொன்றுசென்று அம்பாறையில் மயிலின் செல்வாக்கை உணர்த்தியதில் பாரிய பங்களிப்பை செய்தவரும் அக்கட்சியின் கொள்கைகளை மக்கள் மனதில் திடமாக பதிப்பதில் பங்களிப்பு செய்தவருமான மக்கள் காங்கிரசின் பொதுத்தேர்தல் முதலாம் இலக்க வேட்பாளராகவும் இருந்த அன்வர் முஸ்தபா அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து சிறிது காலம் மௌனமாக இருந்துவந்தார்.
என்றாலும் அவரது ஆதரவாளர்களினால் பதவிக்காக ஒட்டிகொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து அன்வர் முஸ்தபா அவர்களை கட்சி தலைமை ஓரம்கட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. என்றாலும் அவர் அமைச்சரை பற்றியோ அவருக்கு நடந்த அநீதிகள் பற்றியோ எங்கேயும் வாய்திறக்காமல் இருந்துவந்துள்ளார். என்றாலும் அவருக்கு NADA வில் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டும் இருந்தது.
இராஜதந்திர கல்வியை முடித்திருக்கும் அவர் சரியான தருணங்களில் உதவக்கூடிய பல நாட்டின் தூதரகங்களின் நேரடி உறவை பேணிவரும் அன்வர் முஸ்தபா அவர்கள் பல சேவைகளை மௌனமாக எந்தவித ஆர்ப்பாட்டங்களுமின்றி செய்துவருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கவனத்தில் கொண்டே மக்கள் காங்கிரசின் சர்வதேச பணிப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் களமிறங்கிய அன்வர் முஸ்தபா அவர்கள் சம்மாந்துறை கல்முனை பொத்துவில் தொகுதிகளின் பொதுவேட்பாளராக இறக்கப்பட்டதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அக்கட்சியின் செயலாளர் தெரிவித்திருந்தார். மஹிந்த அரசின் காலத்தில் நடைபெற்ற இனவாத செயற்பாடுகளை நேரடியாக தைரியமாக கேள்விக்குட்படுத்தியதன் விளைவாகவும் கல்முனை தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்ற அடிப்படையிலும் சம்மாந்துறை தொகுதியில் வாழ்ந்து வருபவர் என்ற அடிப்படையிலும் பொத்துவில் தொகுதியில் செறிந்து வாழும் அவரின் குடும்ப பின்னணியின் செல்வாக்கினாலும் கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தார்.
ஆனால் மௌனமாக இருந்து வந்த அன்வர் முஸ்தபா இப்போது ஊடங்களில் அமைச்சர் அதாவுள்ளாஹ்வின் கட்சியான தேசிய காங்கிரசில் இணைய உள்ளதாகவும்,இணைந்து விட்டதாகவும் பரவலாக பேசப்பட்டு வரும் இந்நிலையில் அவரின் ஆதரவாளர்களினதும்,தேசிய காங்கிரஸ் அபிமானிகளினதும் எதிர்பார்ப்பாக அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தேசிய காங்கிரசில் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
தேசிய காங்கிரஸ் தலைமையும் அவரது முழுத்திறனையும் பெற்று அவருக்கான சிறந்த இடத்தை வழங்கி திறமைகளை தமது கட்சியின் வளர்ச்சிக்கு செலவளிப்பதன் மூலம் கட்சி கிழக்கில் மீண்டும் பலமான சக்தியாக திகழும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. மக்கள் காங்கிரசை அம்பாறைக்கு கொண்டுவந்த போது சகலரும் ஏளனம் செய்தும் அவற்றையெல்லாம் தமது வளச்சியாக கொண்ட அவரது திடம் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்லும் என்பது மக்களின் நம்பிக்கை. அத்துடன் அதிகமான வெளிநாட்டு தூதரகங்களினதும், தூதுவர்களினதும் நேரடி உறவைக்கொண்ட முஸ்தபாவின் வருகையினால் கட்சி நடவடிக்கைகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க உதவியாக இருக்கும்.
முஸ்லிங்களுக்கு இடம்பெற்றுவரும் அநீதிகளை தட்டிகேட்கும் வல்லமை படைத்த தலைமையின் இழப்பை அனுபவிக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு மு.அமைச்சர் அதாவுல்லாஹ்வின் அவசியம் உணரப்பட்டுவரும் இவ்வேளையில் அன்வர் முஸ்தபா போன்ற ஆளுமை மிக்க கல்வியலாளர்களும், இராஜ தந்திரிகளும் தேசிய காங்கிரசை பலப்படுத்த முன்வரவேண்டும். அத்துடன் சமூக சிந்தனை மிக்க இளைஜர்களையும் இந்த பயணத்தில் தே.காங்கிரஸ் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலம் சமூகத்துக்கு சிறந்த பலமான கட்சியாக தே.காங்கிரஸ் அமையும்.