Breaking
Sun. Nov 24th, 2024
உமாஓயா திட்டத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டால் பண்டாரவளை, எல்ல, வெலிமடை உட்பட்ட பல பிரதேசங்களில் 23 வணக்கஸ்தலங்களும், புராதனச் சின்னங்களும் பாதிப்படைந்திருப்பதாக கபே அமைப்பு நடத்திய ஆராய்ச்சியின்போது தெரியவந்திருக்கின்றது.

வரலாற்றுப் புகழ்கொண்ட இந்த ஸ்தலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து புத்தசாசன அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், புராதனப் பொருட்கள் திணைக்களம் போன்றவை எவ்வித அக்கறையும் காட்டாதது வருந்தத்தக்க விடயமென அந்த அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

வட்டகமுவ விமலசிறி விகாரை, எகடகம சுமணாஷிராமய, குருந்துகொல்ல விதர்ஷனாராமய, மக்குல் எல்ல புராண விகாரை, ஹீல்ஓயா புராண விகாரை, கிருஒருவ ஆனந்தாராமய, பண்டாரவளை பிரிவென, பிந்துனுவௌ பன்சலை, எல்லதொட்ட எல்ல பன்சலை, அம்பிட்டிய பிட்சு ஆராமய,
திக்காபிட்டிய மத்திய பன்சலை, திக்காபிட்டிய பிரிவென, குருகுந்தே பன்சலை, திகனதென்ன பன்சலை, எத்தலபிட்டிய பெத்தாராமய, அமுனுதோவ ரத்னாயக்க முதலின்தாராமய, உளுகல ரஜமகா விகாரை, தோவ பன்சல, பண்டாரவளை ஸ்ரீ புஷ்பாராமய உட்பட்ட பௌத்த விகாரைகளுடன் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *