பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது மாகாண சபை ரவிகரன்

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்கே காணிகள் இல்லாத நிலையில் முஸ்லிம் மக்களுக்காக விசேடமாக ஒரு செயலணியை உருவாக்கி காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் உள்ள காடுகளை அழித்து அந்த பகுதியில் முஸ்லிம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

குடியேற்றத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகள் விடுதலைப் புலிகளால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் உள்ள பகுதி.

இது எப்போதும் இந்த மாவட்ட மக்களுக்கு உரித்தான வனப்பகுதிகளாகும்.

முல்லைத்தீவில் இதுவரை கடுமையான வறட்சி நிலவுகின்றது. இதனால் வனங்களை அழித்து குடியேற்றம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

இந்த குடியேறத்துக்கு எதிராக இளைஞர்கள் திரண்டுள்ளார்கள். அவர்களுடன் நானும் இணையவுள்ளேன். காடழித்து மேற்கொள்ளப்படும் குடியேறத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரரின் செயலணியில் இருந்து அஸீஸ் நிசாருதீன் விலகினார்.

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்:

wpengine

பசிலின் வருகையின் பின்பு விமல்,கம்மன்பிலவின் துறைகள் பறிபோகும்

wpengine