உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச ரீதியில் பேஸ்புக் சமூகவலைதளத்தை கடந்த மாதம் வரையிலான பயன்பாட்டாளர்களின் விவரங்கள் குறித்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், உலக அளவில் 24.1 கோடி பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடியாக உள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தாலும், நாட்டின் மொத்த மக்கள் தொகையின்படி இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.