பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த புதிய காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
துரித கதியில் இந்த உத்தேச சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தீர்மானித்திற்கு அமைய பாரிய நிதி மோசடிகள் தொடர்பான காரியாலயம் அமைக்கப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கும் வகையில் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நிகரான நடவடிக்கைகள் எடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயம் உருவாக்கப்படவுள்ளது.