Breaking
Sun. Nov 24th, 2024

(ஏ.எச்.எம். பூமுதீன்)

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மு.கா தலைவருக்கு அச்சமும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அடடளைச்சேனைக்கு செல்வதட்கு- அந்த மக்கள் ஹக்கீமுக்கு எதிர்ப்பு காட்டிவரும் நிலையில், சாய்ந்தமருது மக்கள் ஒருபடி மேல் சென்று கூக்குரலிட்டு அவரை விரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக அண்மையில் அவருக்கும் தவிசாளருக்கும் கூக்குரலிட்ட மக்களால் பீதியடையந்த ஹக்கீம் , தனது உரையை சுருக்கிக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

அடடளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்பி நியமனம் – மாகாண சபை கலைப்புடன் கிழக்கு முதல்வருக்கு வழங்கப்படவுள்ள உண்மையை தெளிவாக அம்மக்கள் அறிந்துள்ளனர். அத்துடன், சுகாதார அமைச்சர் நசீருக்கும் அது தொடர்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

“கிழக்கு தேர்தலில் மீண்டும் வென்று வாருங்கள், இதே அமைச்சை மீண்டும் வழங்கி, அடடளைச்சேனையை மீண்டும் அலங்கரிக்கின்றேன்” என்று ஹக்கீமால் – நசீருக்கு கூறப்பட்டுவிட்டது. இது நசீருக்கு பெரும் சங்கடத்தையும் தோல்வி பீதியையும் ஏட்படுத்திவிட்டது.

இதனால்தான், நோன்பு திறப்பு நிகழ்வில் கூட ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை. சிறிய தாயின் மரணம் எனக்கூறி, நிகழ்வுக்கு வர மறுத்தார்.

இந்த நிலையில்தான், சாய்ந்தமருது மக்களும் ஹக்கீமை விரட்ட முயல்கின்றனர்.

சாய்ந்தமருத்துக்கு எதையும் செய்யாத- செய்யவிடாமல் ஹக்கீம் தடுக்கும் உண்மையை அந்த ஊர்மக்கள் தெளிவாக உணர்ந்து – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தலைமையின் கீழ் மக்கள் காங்கிரசில் இணைந்து பயணிக்க முயல்கின்றனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்-மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான ஜெமீலின் ஆளுமை இன்று சாய்ந்தமருது மக்களால் வெகுவாக உணரப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இளைஞ்ர்கள் ஜெமீல் தலைமையின் கீழ் மக்கள் காங்கிரசில் அணி திரள்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் எடுத்த 33000 வாக்குகளையும் இந்த நிமிடம் வரை தக்கவைத்திருப்பதில் – கட்சி தலைவரின் வழிகாட்டலில் ஜெமீலுக்கும் பாரிய பங்குண்டு எனலாம்.

இப்போது, அவர்- கட்சியை மேலும் வளர்க்கும் பணியை கட்சிதமாக முன்னெடுக்கின்றார். ஊர் ஊராக சென்று கட்சி பிரமுகர்களை சந்திப்பது , ஊக்கமளிப்பது என்று ஜெமீலின் பனி பலராலும் சிலாகிக்கப்படுகின்றது.

ஹக்கீமின் காட்டுதர்பாருக்கு – தகுந்த பாடத்தை அம்பாறையில் ஜெமீல் கொடுத்துவருவது மக்கள் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் உட்சாகத்தை ஏட்படுத்தியுள்ளது .

இவ்வேளையில்,அம்பாறையில் இதுவரை காட்டுதர்பார் நடத்திவந்த ஹக்கீமுக்கு இரெண்டு அதிக வாக்காளர்களைக்கொண்ட ஊர்கள் தடை விதித்துள்ள நிலையில் – மூன்றாவது ஊராக மருதமுனை மக்களும் ஜெமீலின் கீழ் அணிதிரள தயாராகி வருகின்றனர்.

கட்சியின் தலைவர்-அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனையுடன் திடமான அபிவிருத்தி- தொழில் வாய்ப்புக்களை ஜெமீலின் ஊடாக பெறலாம் என்ற நம்பிக்கை இன்று மருதமுனை இளைஞ்ர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. அதோடு, முன்னாள் மேயர் சிராசும் கட்சியை வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்துவதையும் மறக்க முடியாது.

இந்தவேளையில், ஹக்கீமை விரட்டும் – தடை விதிக்கும் மூன்றாவது ஊராக மருதமுனை திகளப்போகின்றது.

மருதமுனைக்கான மேயர் பதவி – சாய்ந்தமருது மக்கள் எடுத்துள்ள முடிவால் மாநகரை சபையை முகா வெற்றிக்கொள்ளாது என்ற எதார்த்தமே மருதமுனை மக்களின் இந்த தீர்மானத்துக்கான காரணமாகும்.

இவ்வாறான காரணிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ள நிலையில் – மறுபக்கம் முகாவின் முன்னாள்களான பஷீர், ஹஸனலியின் முஸ்லீம் கூட்டமைப்பு பிரச்சாரம். இவைகளால் அச்சமும் பீதியும் அடைந்துள்ள ஹக்கீம்- வன்னி சென்று உளறியுள்ளார்.

வன்னி மாவட்டமே முகாவை கை கழுவி 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அம்பாறையில் தனது காட்டு தர்பார் முடிவுக்கு வருவதும் இதெட்கெல்லாம் காரணம்- ரிஷாத் பதியுதீன் – சமூகத்தினரால் அதிகம் விரும்பப்படுவதே என்பதை உணர்ந்துள்ள ஹக்கீம்- ஆத்திர மேலீட்டால் வன்னி சென்று உளற ஆரம்பித்துள்ளதை வன்னி மக்கள் அறியாமலில்லை.

இந்தநிலையில் கிழக்கு தேர்தல் முகாவுக்கும் ஹக்கீமுக்கு பலத்த அடியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *