பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிப் ரஹ்மானின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பு வசதி

சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் சிறந்த தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கான கருத்தரங்கொன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் ஏற்பாட்டில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

கொழும்பு நகரில் உருவாகிவரும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைசார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை பெறும் வகையில் கொழும்பு பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வார இறுதி நாட்களில் நடாத்தப்படும் பயிற்சி நெறி தொடர்பான இலவச அறிவூட்டல் கருத்தரங்கு   எதிர்வரும்  திங்கட்கிழமை, ஜூலை 17 ஆம் திகதி கொழும்பு 10, மாளிகாவத்தை மன்ஸில் வரவேற்பு மண்டபத்தில் பி.ப.3.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான விபரங்களுக்கு

சமீர் சகாப்தீன்: 0775983021, ஏ.ஆர்.எம்.சபான்: 0772920383. ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

wpengine

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடுவார்களா? உமர் அப்துல்லா கேள்வி

wpengine

வவுனியா சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல் நாட்டினார்.

wpengine