Breaking
Sun. Nov 24th, 2024

(ஜெமீல் அகமட்)

வட பகுதி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினையில் ஒன்றான மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்ட நீண்ட கால முயற்சியின் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் எழுத்தூரில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க .அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கிம் மற்றும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விழா என்பது வட புல மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் நேரில் கண்டு அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரு அடித்தளமாகவே காணப்பட்டது காரணம் மேடையில் இந்த நாட்டின் பிரதமர் விற்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யுத்தத்தால் மனச்சோர்வு அடைந்து இருக்கும் மன்னார் மாவட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் றிசாத் அவர்கள் தனது அரசியல் முதுமையை பயன்படுத்தியுள்ளார், என்று தான் கூற வேண்டும்.

அதாவது இன்னும் அகதியாக வாழும் வட மாகாண மக்களை அவர்களது சொந்த இடத்தில் துரிதமாக மீள்குடியேற்றம் செய்வதற்கு பிரதமர் உதவ வேண்டும் அத்தோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக மல்வத்து ஓயா திட்டத்தை அபிவிருத்தி செய்து இரு போக விவசாய பயிர் செய்கைக்கு வழி வகுத்தல் அடுத்து வட மாகாணம் என்பது எல்லா இயற்கை வளங்களும் கொண்ட அழகிய பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக சில அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு முதலில் நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என்று மக்களின் பிரச்சினைகளை கூடிய விரைவில் தீர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் உறுக்கமான கோரிக்கையை வைத்து மேடையில் பேசினார் அவரின் மக்கள் நலன் சார்ந்த பேச்சு பலரையும் சிந்திக்க வைத்து
இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

இதனிடையில் அடுத்த தமிழ் பேசும் அமைச்சராக இருக்கும் ஹக்கிம் உறையாற்றுகையில் மன்னார் மக்களின் பிரச்சினையை பிரதமருக்கு தெளிவுபடுத்துவார் என அவரின் ஆதரவாளர்கள் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த போது ஹக்கிம் மக்கள் பிரச்சினை பற்றி எதுவுமே வாய் திறந்து பேசவில்லை அவர் பேசியது எல்லாம் எங்கேயோ போய் பேச வேண்டிய அரசியல் யாப்பு விடயத்தை அகதிகள் வாழும் மன்னாரில் உள்ள மேடையில் பேசியதால் மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

ஹக்கிம் முழுக்க பேசியது புதிய அரசியல்யாப்பை எப்படியும் ஜனாதிபதி பிரதமர் இருவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் அதை தோல்வியடைய செய்ய கூடாது என்று தான் பேசினாரே தவிர வட புல மக்களின் நிலை பற்றி காரசாரமாக பேச வில்லை அதனால் ஹக்கிம் செய்யும் அரசியல் என்ன என்பதை மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.

ஒரு கட்சியின் தலைவன் ஒரு இனத்தின் தலைவன் என்று தன்னை தானே அலங்கரித்து கொண்டு இருக்கும் ஹக்கிம் செய்யும் அரசியல் என்பது நாட்டு மக்களுக்கு அல்ல அவரது இனத்துக்கும் எந்த நன்மையும் அளிக்காது என்று அரசியல்வாதிகளுக்கும் இப்போது தெரிந்து விட்டது ஆனால் ஒரு சில முட்டாள்களுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை அவர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்

எனவே தன்னை நம்பி வாழும் மக்களுக்கு உதவி செய்யாதவன் துரோகி என்பது போல் தன்னை நம்பிய சமுதாயத்துக்கு இது வரை அரசியல் துரோகம் செய்து வருகின்றார் ஹக்கிம் என்பதை புத்தூர் மேடை துள்ளியமாக காட்டியுள்ளது.

அதாவது கிழக்கான் விழித்து விட்டான் பழைய அரசியல் செய்ய முடியாது புதிய அரசியலால் அரசியல் செய்யலாமா என சிந்திக்கின்றார் ஆனால் அவரது சுயநல அரசியலுக்கு மக்கள் இனி இடம் கொடுக்கமாட்டார்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *