பிரதான செய்திகள்

ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு (படம்) 

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஹெம்மாதகமயில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமயரூபம், கல்வி, பொருளாதாரம் மற்றும் நிர்வாக வாழ்வியல் பற்றி இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், விசேட அதிதியாக அமைச்சர் எம்.எச்.ஏ. கபீர் ஹாசிம் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தந்தையை கொலை செய்து அதை மறைக்க திட்டம் தீட்டிய மகன் .

Maash

உயர் அதிகாரியினை இடமாற்றம் செய்ய வேண்டும்! ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கை

wpengine

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

wpengine