Breaking
Sun. Nov 24th, 2024
கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவதியுறும் சிறுவர்களுக்கான உதவியளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

CDL (children development lanka) என்னும் இலாப நோக்கற்ற நிறுவனம் குறித்த செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது,

இந்த திட்டத்தினை மேலும் விரிவாக்கும் முகமாக மேற்படி உதவி தேவைப்படும் மேலதிக சிறுவர்களை இணைக்க ஆயத்தமாக உள்ளதாக நிறுவன இயக்குனர் பூர்னிமா மேதவி தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தங்களது விண்ணப்பக் கடிதங்களை தங்கள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன், 395/99 யோஷவாஸ் வீதி, இரம்பைக்குளம் வவுனியாவில் அமைந்துள்ள CDL வவுனியா மாவட்ட அலுவலகத்தில் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பங்கள் அனைத்தும் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் குறித்த பிரதேசசெயலர்கள் ஆலோசனையின் பெயரில் தேவைகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் உதவி அவசியமான சிறுவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இதனோடு பயன்பெற விரும்பும் பெற்றோர்/ பாதுகாவலர் இந்த திட்டங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை 0765653974 என்னும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *