(அப்துல் அஸீஸ் அஸாம்)
நேற்று எழுத்தூரில் மிகவும் பிரமாண்டமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிகளிலும் அரசியல் செய்வதற்கு ஒரு சில விடயங்கள் காணப்படும். அந்த வகையில் வடக்கில் குடி நீர் பிரச்சினையானது அரசியல் வாதிகள் வாக்கு சேகரிக்கும் துரும்பாக பயன்படுத்தும் ஒன்றாகும்.
இந்த பாரிய அபிவிருத்தி நிகழ்வில் அக் குறித்த அமைச்சின் அமைச்சராக ஹக்கீம் இருப்பதால் அமைச்சர் றிஷாதை தவிர்ப்பது அவருடைய அரசியலுக்கு பலம் சேர்த்திருக்கும். அந்த வகையில் இது தன்னுடைய சேவை என பல வழிகளிலும் அமைச்சர் ஹக்கீம் ஊடகங்கள் வாயிலாக நிறுவ முயன்றார்.
இப்படியான நிலையில் ஏன் அவரால் அவரால் தவிர்க்க முடியவில்லை என்ற வினா எழலாம். இக் குறித்த திட்டம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நீர் வழங்கல் அமைச்சராக காலத்தில் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். அக் காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது உலர் வலய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட புத்தளம், சிலாபம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய நான்கு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக உதவி செய்தது.
இது அந் நிதியின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐந்தாவது உதவி திட்டத்தின் கீழ் ( ADB-05 ) செய்யப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பிரதேசங்களை இத் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் குறித்த அமைச்சரை தொடர்பு கொண்டு அமைச்சர் றிஷாதே மேற்கொண்டிருந்தார். இதன் போது வவுனியா பிரதேசத்தில் மக்கள் காணிகள் உள் வாங்கப்பட்டு அதற்கு பகரமாக மாற்று காணிகள் வழங்கப்பட்டே இத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் போதெழுந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர் றிஷாத் மும்முரமாக நின்று உழைத்திருந்தார். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீமுக்கு தெரியுமோ தெரியவில்லை. இருந்த போதிலும் மன்னாரில் அவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழவில்லை.
இதனாலேயே அமைச்சர் ஹக்கீமால் அமைச்சர் றிஷாதின் வருகையை தடுக்க முடியாமல் போனது. இந் நிகழ்வுக்கு வழமை போன்று யாரோ செய்ததை திறந்து பெயர் பெறவே அமைச்சர் ஹக்கீம் வந்தார் என்பதே உண்மையாகும்.