பிரதான செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் காசோலை மோசடி! உத்தியோகத்தர் கைது

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கணக்கு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரினால் காசோலை மோசடியில் ஈடுபட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் 20 பக்க காசோலையினை கொண்ட தொகுதியில் அந்ந உத்தியோகத்தர் கடைசி பக்க காசோலையினை மட்டும் வைத்துகொண்டு தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த வேலையில் பிரதேச செயலக கணக்கில் பணம் குறைவதை அறிந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும், தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் உள்ளார். என அறியமுடிகின்றது.

இதனுடன் சம்மந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களையும்,விசாரணைக்கு வருமாறு பொலிஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

அமோ கட்சியிலிருந்து மஹாத்தீர் மொஹமட் விலகினார்

wpengine

தலைமன்னார் – தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை நீந்தி கடந்து 7 பேர் சாதனை!

Editor

ஈமெயில் தொழில்நுற்பக் கோளாறு

wpengine