மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் வட்டார முறையிலான பிரிவுகள் தொடர்பான வர்த்தகமானி அறிவித்தல் கடந்த (2017/02/17)ஆம் திகதி வெளிவந்த போதும் தற்போது தான் மக்கள் பார்வைக்கு கிடைத்துள்ளது.அதன் காரணமாக முன்னால் பிரதேச செயலாளர் மேற்கொண்ட பக்கசார்பான செயற்பாட்டின் காரணமாக முசலி பிரதேச மக்கள் மிகவும் ஆவேசத்தில் உள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றது.
இது தொடர்பில் பிரதேச மக்களை தொடர்புகொண்டு வினவிய போது
கடந்த முசலி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முசலி பிரதேச சபைக்கு ஒரு தமிழ் உறுப்பினர் தெரிவாகி இருந்திருந்தார். என்றும் ஆனால் புதிய வட்டார முறையின் ஊடாக தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் குறைந்து தமிழ் பிரதிநிதிகள் 2 தொடக்கம் 3 பேர் தெரிவாக அதிக சந்தர்ப்பம் உள்ளவாறு முசலியின் முன்னால் பிரதேச செயலாளர் வட்டாங்களை சீர்செய்து உள்ளார். என்றும் இது அவருடைய சேவைகாலத்தில் முசலி பிரதேச முஸ்லிம் மக்களுக்கு செய்த பாரிய தூரோகம் எனவும் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று அரிப்பு தமிழ் கிராமம் ஒன்று தான் ஆனால் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் இரண்டு உறுப்பினர்கள் அங்கு வாழும் குடும்ப எண்ணிக்கை கூட மிகவும் குறைவு காணப்படுகின்றது.
அதுபோல சில உத்திகளை கையாண்டு முசலி முஸ்லிம்களை பழி தீர்க்கும் நோக்குடன் வட்டாரத்தின் பெயரை கூட தமிழ் காராமங்களின் பெயர்களை முன்னிறுத்தி செயற்பட்டு விட்டார் எனவும்,இந்த வட்டார பிரிவுகளை மேற்கொள்ளும் போது பலரிடம் ஆலோசனை கூட பெறாமல் தான் நினைத்தை போன்று செயற்பட்டு இருக்கின்றார்.
இந்த விடயத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள்,கல்வியலாளர்கள்,
வட்டாரம் 1கிராம பிரிவு அரிப்பு கிழக்கு, குடுப்ப எண்ணிக்கை 250, உறுப்பினர் 01வட்டாரம் 2கிராம பிரிவு அரிப்பு மேற்கு,குடும்ப எண்ணிக்கை 322,உறுப்பினர் 01வட்டாரம் 3கிராம பிரிவு பண்டாரவெளி,கிராம பிரிவு பூநெச்சிக்குளம்,மொத்த குடும்ப எண்ணிக்கை 756,உறுப்பினர் 01வட்டாரம் 4கிராம பிரிவு புதுவெளி,கிராம பிரிவு மேத்தன்வெளி மொத்த குடும்ப எண்ணிக்கை 415வட்டாரம் 5கிராம பிரிவு சிலாவத்துறை,சவேரியார்புரம்,கொக்குபடையான்,மொத்த குடும்ப எண்ணிக்கை 1079வட்டாரம் 6கிராம பிரிவு அகத்திமுரிப்பு,கிராம பிரிவு கூளாங்குளம்,மொத்த குடும்ப எண்ணிக்கை 1062வட்டாரம் 7கிராம பிரிவு பெரிய பொற்கேணி,கிராம பிரிவு சின்ன பொற்கேணி,மொத்த குடும்ப எண்ணிக்கை 700,உறுப்பினர் எண்ணிக்கை 01வட்டாரம் 8கிராம பிரிவு மருதமடு,கிராம பிரிவு வேப்பங்குளம்,மொத்த குடும்ப எண்ணிக்கை 1231,உறுப்பினர் 01வட்டாரம் 9கிராம பிரிவு கொண்டச்சி,கிராம பிரிவு கரடிக்குழி,மொத்த குடும்ப எண்ணிக்கை 1092,உறுப்பினர் 01வட்டாரம் 10கிராம பிரிவு மரிச்சுக்கட்டி,கிராம பிரிவு பாழைக்குழி,கிராம பிரிவு முள்ளிக்குளம்,மொத்த குடும்ப எண்ணிக்கை 1111,உறுப்பினர் 01