Breaking
Sun. Nov 24th, 2024
(ஊடகப்பிரிவு)

அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு, இருக்கும் அதிகாரங்களை கொண்டு சமூகத்திற்கு உருப்படியானப் பயனை பெற்றுக்கொடுப்பது  பற்றி சிந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரமுது அஹனப் எழுதிய “நவரசம்”; கவிதை நூல் வெளியீட்டு விழா பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம  அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக முசலி பிரதேசத்தில் நாம் எந்தவிதமான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை என்று இன்னுமே கூறிக்கொண்டு திரிவோர் இந்தப் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தியை யார் தான் செய்கிறார்கள் என்றேனும் கூறமுடியுமா? வெறுமனே என்னை குற்றஞ்சாட்டுவதற்காக, என்னை வீழ்த்துவதற்காக, என்னை அதிகாரத்தில் இருந்து துரத்துவதற்காக வேண்டுமென்றே குறைகளையும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளையும்  கூறிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கின்றது.

4ம் கட்டை தொடக்கம் அரிப்புக் கிராமம் வரையிலான பிரதேசத்தில் உயர்ந்து நிற்கும் மாடிக்கட்டிடங்களை யார் கட்டியது? இந்தப் பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகள் யாரின் முயற்சியனால் கொண்டுவரப்பட்டது? உடைந்து கிடந்த பள்ளிவாசல்களை புனரமைத்தது யார்? புதிய பள்ளிவாசல்கள் எவரது முயற்சியினால் அமைக்கப்பட்டது? தூர்ந்து போன குளங்களை புனரமைக்க உதவியது யார்? மக்களின் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை செய்து கொடுத்தவர்கள் யார்? வைத்தியசாலை வசதி, தபால் சேவை மற்றும் இன்னொரன்ன தேவைகள், உதவிகளுக்கு எந்தவொரு அரசியல்வாதியேனும் உரிமைகோர முன்வருவார்களா? நாங்கள் செய்வதை எல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டு விமர்சனம் செய்யும் சிலர், எங்களின் நல்ல பணிகளையெல்லாம்  பிழையான பார்வையிலேயே நோக்குகின்ற நிலையே இன்னும் இருக்கின்றது.

யுத்தத்தின் பின்னர் சீரழிந்து போய்க்கிடந்த இந்தப் பிரதேசத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பித்து மீளக்கட்டியெழுப்பினோம்.

L

மாணவர்களின் கல்வித் தேவை கருதி ஏக காலத்தில் சிலாபத்துறை, பண்டாரவெளி, தாராபுரம், எருக்கலம்பிட்டி, தலைமன்னார் உட்பட 10பாடசாலைக்கு அப்போதைய வடக்கு ஆளுனரின் உதவியுடன் 2மாடிக் கட்டிடங்களை வழங்கினோம்.

மண்வீதிகளாக இருந்த அநேகமான வீதிகளை தார் வீதிகளாகவும், காபட் வீதிகளாகவும் மாற்றியிருக்கின்றோம்.
இறைவனுக்கும் மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த விடயங்கள் தெரியும். ஏந்தவிதமான குறிப்பிடத்தக ஒத்துழைப்புக்களுமின்றி,பல்வேறு முட்டுக்கட்டைகள் சவால்களுக்கு மத்தியிலே இந்தப் பணிகளை முன்னெடுத்தோம், முன்னெடுத்து வருகின்றோம். மறிச்சிக்கட்டியில் காடாகிப் போயிருந்த மக்களின் சொந்தக் காணிகளை துப்பரவாக்கும் போது என் மீது அபாண்டங்களை பரப்பினர். எனக்கு 600ஏக்கர் காணி உள்ளதாக இனவாதிகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை ஊடகங்களில் பேச வைத்தனர்.

என்னை நியாயப்படுத்தவும் காடழிப்பு சமூகம் என முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் மறுதழிக்க தனியார் தொலைக்காட்சியில் வாதிட வேண்டிய நிப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

சுpங்கள மக்கள் கடவுளுக்கு சமனாக மதிக்கின்ற பௌத்த தேரர்களுடன், சிங்கள மொழியில் பரிச்சியமில்லாத போதும் வாதிட்டு, உண்மை நிலையை உணர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. 
வேண்டுமென்றே விமர்சிப்பதை கைவிட்டு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை முன்வையுங்கள். அதற்கு உதவ காத்திருக்கின்றேன்.
உலகலாவிய போட்டித்தன்மையில் வாழும் நாம் ஊருக்குள்ளே, வட்டாரத்திற்குள்ளே, கிராமத்திற்குள்ளே, பிரதேசத்திற்குள்ளே என்று போட்டிபோடுவதை விடுத்து  முன்னேற முயற்சிப்போம். சமூதாயத்திற்காக இணைந்து பணியாற்றுவோம்
பண்டாரவெளியில் இடம்பெறும் இந்த கவிதை நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. பல்வேறு கஷ்டங்கள், சவால்கள் மத்தியிலே இளம் எழுத்தாளர் அஹ்னா இந்த நூலை ஆக்கியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள் இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், காரியமணல் கூட்டுததாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் அலிக்கான் சரீப், முசலி பிரதேசசபை முன்னால் எதிக்கட்சி தலைவர்  ஜெசீல், வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி, முசலி பிரதேச செயலாளர்  வசந்தகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *