Breaking
Sun. Nov 24th, 2024

 

(ஏ. எச்.எம். பூமுதீன்)

2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து – அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

அதனால், உங்கள் பங்களாவையும் அங்குள்ள ஆடம்பர உபகாரணங்களையும் எனக்கு நன்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை – அவர் எம்பியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவரை உங்களுக்கு தெரியும்.

2000 ஆம் ஆண்டு நான் நவமணியில் அலுவலக செய்தியாளராக வேலை பார்க்கும்போது , ரிஷாத் பதியுதீன் அவர்கள்- மன்னார் மாவட்ட சுக அமைப்பாளர்.

அப்போது அவரிடம் காணப்பட்ட நட்பண்பு , மரியாதையான பேச்சு , அவரது மக்கள் மீது அவர் கொண்டிருந்த பாசம் என்பன என்னை அவர்பக்கம் ஈர்த்தெடுத்தது- இறைவனின் துணையுடன் அவர் , அடுத்து வந்த தேர்தலின் மூலம் எம்பியுமானார். அதட்கு அடுத்து வந்த தேர்தலிலும் மீண்டும் எம்பியானார்.

இதன்பின்னர்தான், 2004 ஆம் ஆண்டுகளில் அவர் வன்னி புனர்வாழ்வு அமைச்சரானதன் பின்னர்தான் – நீங்கள் வேறு வழி இன்றி, முகா தலைவர் எதிர் தரப்பில் இருப்பதால் தனக்கு பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஒட்டிக்கொண்டீர்கள்.

இந்த விடயம் எனக்கு, உங்களுக்கு, இந்த காலப்பகுதியில் இருந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம். பின்னர், அமைச்சின் ஊடாக கொழுத்த வருமானத்தை பெட்டீர்கள். சொகுசு வாகனத்தில் வலம் வந்தீர்கள்.

ஆனால் நானோ, அதே நவமணியில்தான் 5000 ரூபா சம்பளத்தில் இருந்தேன். இப்போது கூறுங்கள் அல்லக்கை நானா? நீங்களா? .. அமைச்சர் ரிஷாதுக்கு துளியளவும் உதவி புரிந்திராத உங்களை, அந்த ரிஷாத் என்ற மனிதர் எந்தளவு தூரம் உங்களை கண்ணியப்படுத்தினார். அந்த கண்ணியப்படுத்தலால்தானே இந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

அமைச்சர் றிஷாத்தின் கீழ்வந்த நிறுவனங்களின் தலைவராக இருந்து அதன் மூலம் கிடைத்த பல லட்சங்களை ( கேள்வி பாத்திரம் உட்பட) கொண்டல்லவா அந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

கூலிக்கு எழுதுபவன், மஞ்சள் கவர் என்றெல்லாம் , அமைச்சர் ரிஷாதுக்கு சார்பாக எழுதும் எண்ணையும் ஏனையோரையும் கூறுகிண்றீர்கள். அவ்வாறு நாங்கள் ரிஷாதுக்கு சார்பாக எழுதியதனால்தானே – நிறுவன தலைவர் பதவிகளை , அமைச்சர் ஊடாக பெற்று அந்த பங்களாவை காட்டினீர்கள்.

அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் 2013 தொடக்கம் 2015 வரைக்கும்தான் – நான், அவரின் ஊடக பொறுப்பாளராக இருந்தேன். அதட்கு அவர் ஊதியம் தந்தது உண்மை. ஆனால், இதட்கு முன்பு- அதன் பின்பு இன்றுவரை அவரிடம் – அவருக்கு சார்பாக எழுத எங்கு, எப்போது, எவ்வளவு கூலி எடுத்தேன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

2015 ஆம் ஆண்டின் பின்னர் 5 சர்வதேச இணையதளங்களின் கிழக்குக்கு பொறுப்பான பிரதான ஊடக செய்தி மேட்பார்வையாளர் பொறுப்பு எனக்கு கிட்டியது. அவர்களின் நிபந்தனைப்படி, ” கட்சி அல்லது அரசியல்வாதி ஒருவரின் கீழ் முழுநேரமாக ஊடக பணி புரியக்கூடாது “. அந்தவகையில் அமைச்சர் றிஷாத்தின் ஊடக பொறுப்பாளர் என்பதில் இருந்து விலகி வந்துவிட்டேன்.

ஆனால், நான் இப்போது வரைக்கும் ரிஷாத் பதியுதீன் என்ற நபரின் ஆதரவாளனே.. இனியும் அப்படிதான். சர்வதேச இணையதளங்கள் தரமான கூலியை வழங்குகின்றன. நான் யாரிடமும் தங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, உங்களுக்கு அந்த தங்கி வாழும் நிலை உள்ளது. அதட்கு நீங்கள் 10 வருடங்கள் அல்லது அதட்கு மேல் பழக்கப்பட்டு விடீர்கள். இப்போது அந்த தங்கி வாழும் நிலை இல்லாமல்போனதால், அமைச்சர் ரிஷாத்தை விமர்சிக்கிண்றீர்கள். அதைவிடுத்து, உங்களின் பழைய தொழிலான “டியூசன் மாஸ்டர் ” என்ற இடத்துக்கு போவதுதான் பொருத்தமானது.

பல்கலை விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பொறியலாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்துறை சார்ந்தோர் – அமைச்சர் றிஷாத்தின் சமூகம் மீதான பற்றுதலை கண்டு பல்வேறு வகைகளில் அவருக்கு சார்பாக எழுதுகின்றனர். அப்படியானால், அவர்களும் கூலி அல்லது மஞ்சள் கவர் எழுத்தாளர்களா? மடத்தனமாக நீங்கள் புலம்புவது உங்களுக்கு விளங்கவில்லையா?

அப்துல் இபுன் மூஸா, ஷேக் அலி போன்ற உங்களின் போலி முகநூல் போன்ற ஒன்றிலா நாம் எழுதுகின்றோம்.? இல்லையே! சம்சுதீன் யூனுசுலெப்பை என்ற மானம்கெட்ட ஒருவனின் முகநூல் ஊடாக நீங்கள் எழுதுவது போல் நாம் எழுத்தினோமா? இல்லையே..!

இறுதியாக, உங்களின் பிரச்சினை தேசியப்பட்டியல் என்பது.
10 வருடங்கள் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்தீர்கள். இந்த காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன கிழித்தீர்கள்.

உங்களின் சொந்த அம்பாறை மாவட்டத்தில் அல்லது கல்முனையில் எதனை பேரை கட்சிக்குள் உள்வாங்கினீர்கள். எதுவுமே இல்லை.

இன்று பாருங்கள்.. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஜெமீல்,அப்துல் மஜீத், துல்ஷான்- முன்னாள் மேயர் சிராஸ் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான், ரியாஸ்-முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் என்று மருதமுனை, பொதுவில், கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் செல்வாக்குள்ளவர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனை உங்களால் இந்த 10 வருடங்களில் செய்ய முடியாது போனது.

கடந்த பொதுத் தேர்தலில், சொந்தமாக ஒரு கூட்டத்தையேனும் ஒழுங்கு செய்தீர்களா? இல்லையே..!
அப்படியிருக்கும்போது உங்களுக்கு எப்பிடி தேசியப்பட்டியலை தர முடியும்..?

பொறுமையாக இருங்கள்..நாகரீகமாக பேச, எழுத பழகுங்கள் இனியாவது. எனவே, மீண்டும் கேட்கிறேன்- அல்லக்கை நீங்களா? அல்லது நானா?..

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *