Breaking
Sun. Nov 24th, 2024

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்தை சீர்­கு­லைக்கும்  இன­வாத அமைப்­பு­களின் ஆதா­ர­மற்ற கருத்­து­க­ளுக்கு துணை போகும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்­களை அர­சாங்கம் கடுந்­தொ­னியில் எச்­ச­ரித்து வெளி­யேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செய்­னு­லாப்தீன் அஹமட் தெரி­வித்தார்.

தற்­போ­தைய நாட்டு நிலைமை தொடர்பில் அவர் ஞாயிற்­றுக்­கி­ழமை 25.06.2017 வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சி­யிலும் பொது­ப­ல­சே­னா­வுக்கு மிகப்­பெரும் பல­மாக இருந்­தவர் சம்­பிக்க ரண­வக்க என்­பதை நாடே அறியும்.

மஹிந்­தவின் ஆட்சி வீழ்­வ­தற்கு அதுவும் ஒரு காரணம் என்­பதை தற்­போ­தைய நல்­லாட்­சியின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்இதற்கு முன்னர் ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து ஹலால் தொடர்பில் பிரச்­சி­னை­யொன்றை உரு­வாக்கி முஸ்­லிம்­களை சிக்கவைத்த தரு­ணத்தில் அமைச்சுப் பொறுப்­பினை வகித்த சம்­பிக்க ரண­வக்க எவ்­வாறு நடந்து கொண்டார் என்­பதை மக்கள் இன்றும் மறந்து விட­வில்லை.

மேலும், அந்தப் பிரச்­சி­னையை பூதா­கர­மாக்கும் வகை­யி­லேயே அவ­ரது ஊடக சந்­திப்­புகள் மற்றும் நாடா­ளு­மன்ற உரைகள் அமைந்­தன என்­பதை நாம் அறிவோம்,அது மாத்­தி­ர­மன்றி, அளுத்­கம சம்­ப­வத்தின் போது  முஸ்­லிம்­களின் சொத்­துகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு வர்த்­தக நிலை­யங்கள் சூறை­யா­டப்­பட்ட நிகழ்­விற்கு யார் முழு­மை­யான காரணம் என்­பது தெளி­வாகத் தெரிந்­தி­ருந்தும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் சிறி­த­ள­வேனும் அக்­க­றை­யின்றி அவர் இன­வா­தி­களை நியா­யப்­ப­டுத்த முயற்­சித்தார் என்­பதை புரிந்து கொள்ள முடியும்.

அத்­துடன் கடந்த வருடம் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் இன­வா­தத்தை கக்கும் பௌத்த தேரர்கள் கைது செய்­யப்­பட்ட போது  தேரர்­க­ளானால் அவர்கள் எந்தக் குற்றம் செய்­தாலும் சட்­டத்தில் சலு­கைகள் வழங்­கப்­பட வேண்டும் கைது செய்­யப்­படக் கூடாது என்ற கோணத்தில் கருத்­து­களை தெரி­வித்­தி­ருந்­தமை சுட்­டிக்­காட்ட வேண்டும்,

ஞான­சார தேரரின் இன்­றைய செயற்­பா­டு­க­ளுக்கு அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவே முழுப்­பொ­றுப்­பையும் ஏற்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடத்­திய ஊடக சந்­திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதா­னகே பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்,

ஆகவே இன்று நாளுக்கு நாள் முஸ்­லிம்கள் மற்றும் சிறு­பான்­மை­யினர் மீது  வெறுப்பு கோஷங்­களை முன்­வைத்து  தோற்றம் பெற்­று­வரும் இன­வாத அமைப்­பு­க­ளுக்கு தூண்­டு­கோ­லா­யுள்­ள­வர்கள் யார் என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கின்­றது.

சம்­பிக்க ரண­வக்க வெளி­யிட்ட ஜிஹாத் எனும் புத்­த­கத்தில் கிழக்கு முத­ல­மைச்சர் கிழக்கில் தனி முஸ்லிம் நாடொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கு­வ­தாக முட்­டாள்­த­ன­மாக பெரும்­பான்மை மக்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்டும் வித­மாக எழு­தி­யி­ருந்தார்,

முஸ்­லிம்கள் எப்­போதும் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் பேணி எல்­லோ­ரு­டனும் இணைந்து வாழவே விரும்­பு­கின்­ற­வர்கள்.இந்த  நாட்டின் நல­னுக்­காக முஸ்­லிம்கள் முன்­னிற்கும் அதே­வேளை நாட்டின் அமை­தி­யையும் குழப்பும் அமைச்சர் சம்­பிக்க போன்­ற­வர்­களை எதிர்த்து குரல் கொடுக்க நாம் தயங்­கப்­போ­வ­தில்லை .

தமது குறு­கிய அர­சியல்  இலா­பங்­களை  நிறை­வேற்றிக் கொள்ள பாரிய திட்­ட­மி­டல்­க­ளுடன் இன­வா­தத்தை தூண்டி அத­னூ­டாக குளிர்­காயும் சம்­பிக்க போன்­ற­வர்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மிகவும் ஆபத்­தா­ன­வர்கள் என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இதனைக் கவ­னத்திற் கொண்டு இன­வா­தத்தை தூண்டும் அமைச்­சர்­களை உடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வது அர­சாங்­கத்­துக்கு மக்கள் மத்­தியில் மேலும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *