உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ட்ரம்பை சந்தித்த மோடி முதல் முதலில் இராப்போசனம்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

 

அமெரிக்க விஜயத்தின்போது இந்திய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வொஷிங்டனில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய இந்திய பிரதமர் அடுத்து வெள்ளை மாளிகைக்கான தனது பயணத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகை அமைச்சரவை கூட்ட அரங்கில் இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

 

ட்ரம்பை, இந்திய பிரதமர் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த சந்திப்பின்போது இராணுவ கூட்டுறவு, சர்வதேச அளவிலான உறவு, வர்த்தகம், எரிசக்தி துறை தொடர்பான விடயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்பினால் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Related posts

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

wpengine

கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம், இரு சந்தேகநபர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி.

Maash

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு அடிப்படையில்

wpengine