Breaking
Tue. Nov 26th, 2024

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

ரமழானில் முடிந்த அளவு அரசியல் பதிவுகளை தவிர்த்து வந்த வை.எல்.எஸ். ஹமீது இன்று 29 ஆவது நோன்புடன்- அவரது ரமழான் கொள்கையை முறித்துக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது.

முஸ்லீம் அமைச்சர் ஒருவர் என்று கூறி- அவரது பெயரை குறிப்பிடாமல் இன்று அதிகாலை அந்த அமைச்சரை – அவரது உரையை விமர்சனம் செய்து தனது கபடத்தனத்தையும் தனக்கு அவர்மீதுள்ள காழ்புணர்ச்சியையும் வை. எல். எஸ். கொட்டித்தீர்த்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

அதனால்தான் , அவர் இன்று நோன்பாளியா என்ற கேள்வியை தொடுக்க வேண்டி ஏட்பட்டது.

அரசியல் பதிவுகளை 28 ஆவது நோன்புவரை தவிர்த்த ஹமீதுக்கு இந்த ஒருநாள் மட்டும் பொறுமை காக்க முடியாமல் போனது அவரது காழ்புணர்ச்சியின் உச்சத்தை வெளிப்படையாக வெளிக்காட்டுகின்றது.

ஒருவேளை- கபுறு வணக்க கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்பதனால்- 28 நோன்புதான் அவருக்கு கடமையோ என்னவோ? ( அல்லாஹ் பாதுகாப்பானாக)

வை.எல்.எஸ்.- முஸ்லீம் அமைச்சர் ஒருவர் என்று கூற முட்படுவது , அமைச்சர் ரிஷாத் பதியுதீனைதான் என்பதை அவரை அறிந்த ஒவ்வருவரும் நன்கு அறிவர்.

அதன்படி, குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெட்ட இப்தார் நிகழ்வில் பேசிய அமைச்சர் ரிஷாத்- “நாட்டிலுள்ள 22 லட்சம் முஸ்லிம்களும் – ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடவேண்டும். அவ்வாறு ஒன்றுபடுவதன் மூலம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் திகழ்வர் என்ற சாரப்பட கூறியதுடன் – உதாரணத்துக்கு இன்று பிரிட்டிஷ் பாராளுமன்றில் ஏட்பட்டுள்ள நிலையையும் சுட்டிக்காட்டினார்.”

மர்ஹூம் அஷ்ரபின் பிட்பாடு – சிறுபான்மை சமூகம் ஆட்சியை தீர்மானிக்கும் பலத்தை நிரூபித்துக்காட்டவில்லை. அவ்வாறான நிலை ஒன்று எட்டப்படும் பொழுது- முஸ்லீம் சமூகத்தின் அபிலாஷைகளை வெற்றி கொள்வது மட்டுமன்றி- இன்று முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அட்டூழியங்களையும் தவிடு பொடியாகிவிடலாம்.

அமைச்சர் றிஷாத்தின் – சமூக பாதுகாப்பு கருதிய – தூர நோக்குகொண்ட அந்த கருத்தை – வை. எல்.எஸ். எள்ளிநகையாட முயன்றிருப்பது – அவர் நிச்சயமாக காழ்ப்புணர்ச்சி எனும் போதைக்குள் கடுமையாக மூழ்கிக் கிடைப்பதையே காட்டுவதுடன், அவரை ஒரு சிறு பிள்ளைத்தனமானவராக பார்க்கவும் தூண்டுகின்றது.

முஸ்லீம் எம்பிக்கள் ஒன்றுபடவேண்டும் என்ற காலகாலமாக கூறிவரும் கருத்துக்கு அப்பால், முதன்முறையாக 22 லட்சம் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரு புதிய தத்துவத்தை அமைச்சர் ரிஷாத் முன்வைத்திருப்பது – முஸ்லீம் சமூகத்தை நேற்று முதல் பலமாக சிந்திக்க தூண்டியுள்ள இவ்வேளை, ஹமீதின் காழ்புணர்ச்சிகொண்ட விமர்சனம் தான்தோன்றித்தனமானவை.

தனது விமர்சனத்துக்கு ஏட்பட்ட வசனப் பஞ்சத்தை மறைக்க மூன்று கதைகளை தூக்கிப்போட்டு உளறித்தள்ளி இருக்கும் ஹமீத், அல்லாஹ்வை மறந்து – தான் ஒரு குப்புள்” என்பதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் கூறுவதைப்போன்று- 22 லட்சம் முஸ்லிம்களும் இனஷா அல்லாஹ் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த பாராளுமன்றில் ஆட்சியை தீர்மானிக்கும் சமூகமாக ஏன் வரமுடியாது? இதனையும் வை.எல்.எஸ். – அல்லாஹ்வை மறந்து நக்கல் செய்துள்ளார். ( அல்லாஹ் அவரின் பிழைகளை மன்னிக்கட்டும்)

அரசில் இருந்து கொண்டு- அரசை விமர்சிப்பவன்தான் தலைவன்., தைரியசாலி. அமைச்சர் ரிஷாத், இன்று மட்டுமல்ல சந்திரிக்கா ஆட்சி தொட்டு மஹிந்த ஆட்சி முதல் – பங்காளியாக இருந்துகொண்டே பகிரங்கமாக அரசை கடும்தொனியில் விமர்சித்துதான் வருகின்றார்.

ஜேஆர், பிரேமதாசா ஆட்சிக் காலங்களில் இருந்த முஸ்லீம் அமைச்சர்களை போல் அடிமையாக- மௌனியாக அமைச்சர் ரிஷாத் இருந்ததில்லை. பகிரங்கமாக அவர்- அரசுக்குள் இருந்து கொண்டே விமர்சிக்கின்றார் என்றால்- தனது அமைச்சு பதவியை தூக்கினாலும் அது தனக்கு பொருட்டல்ல என்ற எதார்த்தத்தை அவர் அறிந்து வைத்திருப்பதனாலாகும்.

ஆக, வை. எல். எஸ். – 29 ஆவது நோன்பை இன்று நோட்டாரோ? இல்லையோ? அவசரக்காரனுக்கு புத்தி மட்டம் என்பதை- அவரது தேசியப்பட்டியல் மோகம் அவ்வப்போது நிரூபித்துக்காட்டி வருகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *