Breaking
Wed. Nov 27th, 2024

(அ.அஹமட்)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கோத்தாபய ராகபக்‌ஷ நீதியமைச்சரைபயன்படுத்தி  ஞானசாரரை பாதுகாப்பதாகஅரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்திவரும்  நிலையில் இதன் பின்னணியில் அரசாங்கதரப்பின்  அனுசரனைகளே இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விடயங்கள் அம்பலமாகி வருவதை எம்மால்  அவதானிக்க முடிகிறது.

அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில்ஆட வேண்டிய நிலைஏற்பட்டுள்ளதால் நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன. 

அந்த வகையில் இன்று ஞானசார தேரரைபிணையில் விடுவிக்க ஜனாதிபதிக்குஆலோசகர் போன்றுசெயற்படுபவரும் ஜனாதிபதிக்கு மிக மிகநெருக்கமாக இருப்பவரும் அவரின் தேர்தல்வெற்றிக்கு பாடுபட்டவருமான ஊழல்எதிர்ப்பு முன்னணியின் தலைவர் வலப்பனேசுமங்கள தேரர் களமிறங்கியிருந்தார்.

மத்திய வங்கி ஊழல், கல்குடா மதுபானஉற்பத்தி சாலை ஆகியவற்றுக்கு எதிராககுரல் கொடுத்த விடயங்களிலும் முன்னாள்ஜானாதிபதி காலத்து ஊழல் தொடர்பிலும்அதிக அக்கறை எடுத்து கொண்டுசெயற்பட்டுவந்த ஊழல் எதிர்ப்புமுன்னணியில் தலைவர் உலப்பனைசுமங்கள தேரர் கடந்த இரு வாரங்களாகஞானசார தேரரை காப்பாற்ற கடும்பிரயத்தங்களை மேற்கொண்டிருந்ததோடுஇன்று நீதிமன்றம் வரை வந்து அவருக்குஆதரவாக களமிறங்கி அவரை பிணையில் எடுக்க முடி மூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக செயற்படும்சுமங்கள தேரர் போன்றவர்கள் ஞானசாரதேரர் விடயத்தில் களமிறங்கியதும்ஞானசார தேரருக்கு வரலாற்றில் இல்லாதமுறையில் இன்று மிக மிக வேகமாக  பிணைவழங்கப்பட்டிருந்த விடயமும் ஞானசாரதேரரை பாதுகாப்பது ஜனாதிபதி தரப்பு என்றசந்தேகத்தையும் மக்கள் மத்தியில் மேலும் வலுவடைய செய்துள்ளது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *