(செய்தியாளர்)
மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான மரக்கறி விதை பொதிகள் உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்டத்திலுள்ள 17 விவசாய போதனாசிரியர்கள் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மன்னார் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய 17 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளிலுள்ள மன்னார் தீவு, பேசாலை, நானாட்டான், வஞ்சியங்குளம், உயிலங்குளம், ஆள்காட்டிவெளி, பி.பி.பொற்கேணி, சிலாவத்துறை, பாலம்பிட்டி, இரணைஇலுப்பைக்குளம், காக்கையன்குளம் ஆகிய பகுதிகளுக்கு தலா 50 பயனாளிகளுக்கும் மாந்தை, விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, கொண்டச்சி, தேக்கம், முருங்கன் ஆகிய பகுதிகளில் தலா 75 பயனாளிகளுக்கும் மொத்தமாக 1000 மரக்கறி விதை பொதிகள் வியாழக்கிழமை (22.06.2017) முதல் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி ஏ.சிறிரங்கன் தெரிவித்தார்.
இவ் 1000 விதை பொதிகளும் மன்னார் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளுக்கும் நேேேற்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவும்