பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபையில் பல ஊழல்,நிதி மோசடிகள்! முதலமைச்சர்கள் மாநாட்டில் கூட யோகஸ்வரன் (பா.உ)

வடமாகாண சபையில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணசபையிலும் நிதி மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளனதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் பல நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. விசாரணைகள் நடத்தப்படவில்லை.

முதலமைச்சர் மாநாடு நடத்தியதில் நிதி, ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வுக்குரிய நிதி, மோசடி தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டு அதற்கான நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை.

கிழக்கு மாகாண சபையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் பல தவறுகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தற்போது வடமாகாண சபையை தூக்கிப்பிடித்துக் கொண்டு கிழக்கில் நிதி, ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை என நாங்கள் பிரச்சாரம் செய்ய முற்படவில்லை.

தற்போது வடக்கில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை நீங்கி நல்லதொரு ஆரோக்கியமான செயற்பாட்டிற்காக வழமைபோல் நிர்வாக கட்டமைப்பு முன்வரவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

அங்கு நியாயம் நீதி நிலைக்கவேண்டும். அந்த ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

ரவி கொண்டு போனதை மீண்டும் மங்களவுடன் இணைக்க தீர்மானம்

wpengine

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலிப்பிரதேசத்தில் அடக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

wpengine

புதிய ஆளுநர்கள் நியமனம்! வடமேல் ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்

wpengine