Breaking
Wed. Nov 27th, 2024

(முஹம்மட் மூஹ்சி)

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் இன்றைய (20.6.2017) மாகாண சபை அமர்வின் போது தமது ஆசனத்தின் மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டமொன்றை அதிரடியாக மேற்கொண்டதால் சபை நடவடிக்கைகளை சபைத் தலைவர் டிகிரி அதிகாரிக்கு முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியது.

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதில் இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியை முன்வைத்தே மாகாண சபை உறுப்பினர் நியாஸ் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

“வடமேல் மாகாண ஆசிரிய சேவைக்கு பட்டதாரிகள் 1000 பேர் இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பட்டதாரிகள் 87 பேர் மாத்திரமே சேர்த்துக் கொள்ளப்பட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை பாரிய அநீதி எனவும், இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும், இந்த தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வந்து புத்தளம் மாவட்டத்தில் நிலவும் தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கான சகல வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டும் எனவும் அவர் ஆணித்தரமாக குரல் எழுப்பவே அதன் போது குறுக்கிட்ட மாகாண கல்வியமைச்சர் சந்திய ராஜபக்ச இது விடயத்தில் நியாயம் பெற்றுத் தருவதாகவும் பட்டதாரிகளை விண்ணப்பிக்கச் சொல்லும் படியும் மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்”

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *