புனித நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றிமனிதநேயமற்ற முறையில் புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு இலங்கையின் கிழக்கிலங்கை வர்த்தக ஏற்றுமதி அபிவிருத்திசபை மனிதநேய அடிப்படையில் தங்களது ஆதரவை அழிப்பதாகவும் இச்செயற்பாட்டினால் கத்தார் நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்காலிகஉணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டனைத் தொடர்ந்து கட்டாரில் உணவு தட்டுப்பாடு நீங்கும் வரை இலங்கையிலிருந்து காய்கறி,பழங்கள் உட்பட தேவையான சகல பொருட்களையும் உடனடியாக அனுப்பி வைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் இதன் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் அவர்கள் தெரிவித்தார்
உலகின் முதற்தர செல்வந்த நாடான கட்டாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை எனவும் கட்டாருக்கானஇராஜதந்திர தொடர்புகளை துண்டிப்பதானது நீதியற்ற செயற்பாடு எனவும் தெரிவித்ததார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவுதி அரேபியாவிற்கான அண்மைய விஜயத்தைத் தொடர்ந்தே கட்டாரைத்தனிமைப்படுத்தும் இந்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன இது உலக முஸ்லிங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வெளிப்படையான முயற்ச்சியாகும் எனவும் தெரிவித்தார்