பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அவருக்கு எதிரான தொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொம்பனித்தெரு பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொம்பனித்தெரு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மோதலில் ஈடுபட்டமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதுடன், அன்றைய தினம் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கண்டி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் இரட்டை வேடம்

wpengine

ஏன் வெள்ள அனர்த்தம் ஞான­சார தேரர் தெரிவிக்கின்றார்.

wpengine

QR முறையின் ஊடாக பெற்றோல் வினியோகம்! மன்னார்- கேதீஸ்வரத்தில்

wpengine