Breaking
Sun. Nov 24th, 2024

எம்.ஐ.முபாறக்

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது பல அமைச்சர்கள் வகித்து வந்த அமைச்சுக்கள் பறிக்கப்பட்டு பதிலுக்கு அவர்களுக்கு வேறு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களின் தகுதிகள்-கல்வித் தகைமைகள் தொடர்பில் மஹிந்த அணி கேள்வி எழுப்பி வருகின்றது.

கடந்த காலங்களில் இரண்டு பெரிய அமைச்சுக்கள் தொடர்ச்சியாகச் சர்ச்சைக்குள் சிக்கியே வந்தன.இதனால் அவர்கள் இருவருக்கும் அந்த அமைச்சுக்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் ஓர் அமைச்சை ஏற்கனவே வகித்தவர் தகுதி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால்தான் அந்த அமைச்சு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இவரிடம் வழங்கப்பட்டது.ஆனால்,இவரும் அந்த அமைச்சுக்குத் தகுதி இல்லையாம்.

இவரின் கல்வித் தகைமையைச் சுட்டிக் காட்டி வேறு அமைச்சர்களை அதற்கு நியமிக்க வேண்டும் என்று மஹிந்த தரப்பு கூறுகின்றது.

அந்த அமைச்சை வகிக்கும் அமைச்சர் நான்கு தடவைகள் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றி சித்தியடையத் தவறியவராம்.

பின்பு லண்டன் கல்லூரி ஒன்றில் ஆடைத் துறையில் பட்டப் படிப்பை முடித்து ஆடை வடிவமைப்பு ஆலோசகராக இலங்கையில் சிறிது காலம் பணியாற்றினாராம்.அதன் பின்பே அவர் அரசியலுக்குள் நுழைந்தாராம்.

ஆனால்,வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் பெற்று பிரபல நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்த டாக்டர் ஹர்ஸ டி சில்வா அல்லது NDB வங்கியில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணி புரிந்த எரான் விக்ரம போன்றோரே அந்த அமைச்சுக்குப் பொருத்தமானவர்கள் என்று மஹிந்த அணி சிபாரிசும் செய்கின்றது.

இலங்கையில் அமைச்சர் பதவி வகிப்பதற்கு கல்வித்தகமை எதற்கு பாஸ்?மாட்டிக்கொள்ளாமல் திருடுவதற்கு மாத்திரம் தகுதி-திறமை இருந்தால் போதும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *