Breaking
Sat. Nov 23rd, 2024

(அஸீம் கிலாப்தீன்)

புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 520 உலர் உணவூப்பொதிகள்திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் மூதூர் தோப்பூர் மற்றும்குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட்சிறிலங்கா நிறுவனத்தினால் கடந்த 12ம் திகதி ஞாயிறு வினியோகம் செய்யப்பட்டன.இவ் வினியோக நிகழ்வுகளுக்கான கள ஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் இன்பங்காளர் அமைப்புகளான ரெக்டோ தடயம் பெடோ ஆகிய சமூக சேவைஅமைப்புகள் மேற்கொண்டிருந்தன.

ரமழான் மாதம் ஆரம்பத்திலிருந்து உலர் உணவூப் பொதிகளை பல்வேறுமாவட்டங்களில் முஸ்லிம் எய்ட் வினியோகித்து வருகின்றது. இம்முறைகடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ரத்னபுர மற்றும் மாத்தறமாவட்டத்தைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுவினியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ரமழான் மாத தொடக்கத்தில்வினியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உலமாக்கள் முஸ்லிம் எய்ட்பணியாளர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்புகளின்உறுப்பினர்கள் உலர் உணவு வினியோக நிகழ்வுகளில் பங்கேற்றனர்

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *