Breaking
Sun. Nov 24th, 2024

யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.

 

கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார்.

மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார்.

இந்நிலையில் ஒருவர் மாத்திரம் பயணம் செய்யக்கூடிய போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய தொழிநுட்பத்திற்கேற்ப மாற்றியமைத்துள்ளார்.

அத்தோடு தன்னைப் பார்த்து யாரும் ஏளனமாக சிரித்து விடக் கூடாது என்பதற்காக, விட்டரிற்கே தெரியாமல் தயாரித்து வந்த விமானத்தை, கடந்த மார்ச் மாதம் வயல் வெளிகளிக்கிடையில் அமைத்த விமான ஓடுதளத்தினுடாக வெற்றிகரமாக இயக்கியுள்ளார் ஒரு விவசாயியின் மகன் பாயென்லாங் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *